தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலுக்கும், அவரது எதிர் தரப்பினருக்கும் இடையிலான மோதல் முற்றியுள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தில் 7 கோடி ரூபாய் வைப்புநிதி கையாடல் செய்யப்பட்டிருக்கிறது என்று அச்சங்கத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவின் ஒப்புதல் பெறாமல் இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இது தொடர்பாக அச்சங்கத்தில் உள்ள ஏ.எல்.அழகப்பன், T.சிவா, ஜே.கே. ரித்தீஷ், எஸ்.வி. சேகர், சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் சென்னையில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகங்களுக்கு பூட்டு போட்டனர். இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்திற்கு விஷால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இன்று வருகை தந்தனர். ஆனால், போலீசார் அவர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால், விஷால் தரப்பினருக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது.
இந்த விவகாரம் தொடர்பாக புதியதலைமுறைக்கு தொலைபேசி வாயிலாக பேசிய நடிகர் விஷால், இசைஞானி இளையராஜா நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்படும் நிதியில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு நிலம் வழங்கப்படும் என்பதால், அதனைத் தடுக்கும் நோக்கில் சிலர் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் தயாரிப்பாளர் சங்கத்தில் எந்த ஊழலும் நடைபெறவில்லை எனவும், அனைத்து கணக்கு வழக்குகளும் பொதுக்குழுவில் சமர்ப்பிக்கப்படும் என்றும் விஷால் உறுதியளித்தார்.
“சாவியை வைத்து பூட்டை திறக்க அனுமதிக்க முடியாது; உடைத்தே தீருவேன்” என்று விஷால் தெரிவித்தார். அதற்கு பூட்டை உடைக்க அனுமதிக்க முடியாது; சட்டவிரோதமாக கூடியதாக கைது செய்ய நேரிடும் என்று தேனாம்பேட்டை உதவி ஆணையர் கோவிந்தராஜூ கூறினார். இதனையடுத்து நடிகர் விஷாலும், அவரின் ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டனர்.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?