[X] Close

“பெரிய தொகைக்கு ஏலம் போவேன் என நினைக்கவில்லை” - வருண் சிறப்பு பேட்டி

IPL-Auction---Varun-Chakravarthy-Special-Interview-to-Puthiya-Thalaimurai

இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலத்தில் போவேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி புதிய தலைமுறைக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Advertisement

இந்திய அளவிலான கிரிக்கெட் உலகில் அனைவராலும் கூகுளில் தேடப்படும் நபராகவும், உலக அளவிலான கிரிக்கெட் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்த நபராகவும் ஓரே நாளில் மாறிய வீரராகியுள்ளார் வருண் சக்கரவர்த்தி. தமிழகத்தைச் சேர்ந்த இவர், இன்றைய ஐபிஎல் ஏலத்தில் ரூ.8.4 கோடிக்கு பஞ்சாப் அணியால் எடுக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது சுழற்பந்து வீச்சாளராக உள்ளார். இவரை ஐபிஎல் ஏலத்தில் எடுத்துள்ள பஞ்சாப் அணியின் கேப்டனாக இருப்பவர் அஸ்வின். அவரும் தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

தான் ஐபிஎல் போட்டியில் ரூ.8.4 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது தொடர்பாக வருண் சக்கரவர்த்தி புதிய தலைமுறைக்கு தொலைபேசி மூலம் சிறப்புப் பேட்டியளித்தார். அதில், “ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. நான் எதிர்பார்க்கவே இல்லை. அதுவும் பஞ்சாப் அணியில், நம்ப அஸ்வின் கேப்டனாக உள்ளார். அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.  நிச்சயமா இவ்ளோ பெரிய தொகைக்கு ஏலம் போவேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. அடிப்படை தொகையில் ஏலம் எடுப்பார்கள் என்றே நினைத்தேன். நிறைய சவால் நிறைந்ததா இந்தப் போட்டி இருக்கும். கண்டிப்பாக, ஏனெனில் சர்வதேச வீரர்கள் ஐபிஎல் டி20 போட்டியில் இருப்பார்கள். 

ஆனால் அஸ்வின் கேப்டனாக உள்ளதால் கவலையில்லை. அவரிடம் கேட்டு கற்றுக் கொள்ளலாம். அஸ்வின் தலைமை கண்டிப்பாக எனக்கு உதவியாக இருக்கும். மேலும் அவர் ஒரு பந்துவீச்சாளர் என்பது கூடுதல் பலம் சேர்க்கும். பந்துவீச்சாளர் போன்று அவர் யோசிக்க கூடியவர். அது எனக்கு உதவியாக இருக்கும். அம்மா, அப்பாவே எனது வெற்றிக்கு காரணம். அவர்களுக்கு இந்த மகிழ்ச்சியை அர்ப்பணிக்க விரும்புகிறேன். பேட்ஸ்மேன்களை திணற அடிக்க அவர்களை யோசிக்கவே விட கூடாது. அவர்கள் யோசிப்பதற்கு மாற்றாக பந்துவீச வேண்டும். அது போன்ற ஒரு ஆட்டத்தை 2019 ஐ.பி.எல்-ல் என்னிடம் எதிர்பார்க்கலாம்” என்று கூறினார்.  


Advertisement

Advertisement

Advertisement
[X] Close