Published : 17,Dec 2018 10:07 AM

“உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதா?” - அமெரிக்காவைக் கண்டித்த சவுதி

Saudi-Arabia-Condemned-America-for-Interference

சவுதிக்கு எதிராக அமெரிக்க செனட் உறுப்பினர்கள் கொண்டு‌வந்த தீர்மானத்துக்கு அந்நாடு கண்டனம் தெரிவி‌த்துள்ளது.

ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரசுப் படைகள் நடத்தி வரும் போருக்கு ஆதரவு அளிக்கக் கூடாது என அமெரிக்க செனட் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினர். மேலும், பத்திரிகையாளர் ஜமால் கஷோகி படுகொலைக்கு சவுதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்தான் காரணம் என்றும் மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இந்நிலையில், செனட் உறுப்பினர்களின் இந்நடவடிக்கைக்கு சவுதி அரேபியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை கொண்டு சவுதியின் பட்டத்து இளவரசருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளது. தங்களது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு அமெரிக்க எம்.பி.க்களுக்கு உரிமை இல்லை என்றும் சவுதி வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

மன்னர் குடும்பத்துக்கு எதிரான எந்தவொரு அவமதிப்பையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் சவுதி வெளியுறவு அமைச்சகம் எச்சரித்துள்ளது. முன்னதாக, பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை செய்யப்பட்டப்பட்ட சம்பவம் உலக அளவிலான சர்ச்சையை சவுதி மீது ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்