[X] Close

ஆஸி.டெஸ்ட்: 6 விக்கெட் சாய்த்தார் ஷமி, இந்திய வெற்றிக்கு 287 ரன் இலக்கு!

2nd-test-Australia-lead-by-286-runs

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு 287 ரன்னை இலக்காக ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்துள்ளது. 


Advertisement

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் நடந்து வருகிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் இஷாந்த் சர்மா 4 விக்கெட்டுகளை சாய்த்தார். பும்ரா, உமேஷ் யாதவ், விஹாரி தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.


Advertisement

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, 283 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. கேப்டன் விராத் கோலி அபார சதமடித்தார். அவர் 123 ரன்கள் எடுத்து சர்ச்சையான முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, நேற்றைய ஆட்ட நேர இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்திருந்தது. உஸ்மான் கவாஜா 41 ரன்னுடனும் டிம் பெய்ன் 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

நான்காவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. கவாஜா சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். மறுபக்கம் நன்றாக ஆடிக்கொண்டிருந்த பெய்ன் 37 ரன் எடுத்திருந்த நிலையில் முகமது ஷமி வேகத்தில் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து, ரிடையர் ஹர்ட்டாகி ஓய்வெடுத் த, ஆரோன் பின்ச் வந்தார். பெய்னை வீழ்த்திய அடுத்த பந்திலேயே இவரது விக்கெட்டையும் பறித்தார் ஷமி. அப்போது அந்த அணி 6 விக்கெட்டு க்கு 192 எடுத்திருந்தது. இதையடுத்து கம்மின்ஸ் வந்தார். அவர் வந்த சிறிது நேரத்திலேயே, கவாஜா விக்கெட்டையும் ஷமி எடுத்தார். பின்னர் பும்ரா, கம்மின்ஸை போல்டாக்க, ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டை இழந்தது. 


Advertisement

பின்னர் ஸ்டார்க்கும் நாதன் லைனும் களத்தில் இருந்தனர். லைன், விக்கெட்டை ஷமியும் ஸ்டார்க் விக்கெட்டை பும்ராவும் வீழ்த்த, அந்த அணி யின் இரண்டாவது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. ஹசல்வுட் ஆட்டமிழக்காமல் இருந்தார். அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸில் 243 ரன் எடுத்துள்ளது. இதன் மூலம் 287 ரன்னை, இந்திய அணிக்கு வெற்றி இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்துள்ளது.

இந்திய தரப்பில் முகமது ஷமி 6 விக்கெட்டுகளையும் பும்ரா 3 விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பின்னர் இந்திய அணி, தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுலும் முரளி விஜய்யும் களமிறங்கினர். ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் 4 வது பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றினார் ராகுல். இதையடுத்து புஜாராவும் முரளி விஜய்யும் ஆடி வருகின்றனர். 

Related Tags : Australia2nd testMohammad shamiBumrah

Advertisement

Advertisement
[X] Close