Published : 17,Dec 2018 06:24 AM

ஆன்லைன் மருந்து விற்பனை தடையை நீக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்

Chennai-HC-ordered--ban-on-online-medicine-sale-will-continue

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்ய, மருந்து வணிகர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதையும் மீறி சில நிறுவனங்கள் ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்து வருகின்றன. 

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. அதில், ‘பதிவு செய்யப்படாத ஆன்லைன் கடைகள் மூலமும் மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு இல்லாமலும் மருந்துகள் விற்பனை செய்வது சட்டவிரோ தம். இந்த நிலையில் ஆன்லைன் வர்த்தகம் மூலம் பொதுமக்களுக்கு போலியான, தவறான மருந்துகள் விற்பனை செய்யப்படும்.

பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளில் ஆன்லைனில் மருந்து விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, இங்கும் அது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும். வழக்கு முடியும் வரை ஆன்லைன் மருந்து விற்பனைக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.


இந்த வழக்கை கடந்த அக்டோபர் மாதம் விசாரித்த நீதிபதி மகாதேவன், ஆன்லைன் மருந்து விற்பனைக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார். மருந்து விற்பனை விதிமுறைகளுக்கு உட்பட்டு அரசு அனுமதி அளித்தப்பின் ஆன்லைன் மருந்து விற்பனையை தொடங்கலாம் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வார காலத்துக்கு தள்ளி வைத்தார். பின்னர் வந்த இந்த வழக்கு விசாரணையின் போது, ’மருந்து விற்பனையை தடுக்கும் அதிகாரம் தங்களிடம் இல்லை’ என்று தமிழக அரசு தெரிவித்தது.


இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஆன்லைன் மருந்து விற்பனைக்கான இடைக்கால தடையை நீக்க, மறுப்பு தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம் ஜனவரி 31 ஆம் தேதிக்குள் இதற்கான வரைவு விதிமுறைகளை அறிவிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்