அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படத்தின் அனைத்து பாடல்களையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
நடிகர் அஜித்தை வைத்து இயக்குநர் சிவா வீரம், வேதாளம், விவேகம் உள்ளிட்ட படங்களை இயக்கினார். அவர் அஜித்துடன் 4-வது முறையாக கூட்டணி சேர்ந்த திரைப்படம் விஸ்வாசம். 4 வது முறையும் கூட்டணி சேர்ந்ததால் அதிக எதிர்பார்ப்பு உருவாகியது. இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டரை நவம்பர் 27 ஆம் தேதி படக்குழுவினர் வெளியிட்டனர். எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென்று மோஷன் போஸ்டர் விடப்பட்டாலும் வழக்கம்போல் அஜித் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.
இதைத்தொடர்ந்து அவ்வப்போது படப்பிடிப்பு புகைப்படங்கள், அஜித்தின் புகைப்படங்கள் ஆகியவை இணையத்தில் லீக் ஆகி ட்ரெண்ட் ஆகின. விஸ்வாசம் மூலம் முதன்முதலாக அஜித்துக்கு இசையமைக்கிறார் இமான். படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தில் அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு ‘அடிச்சு தூக்கு’ என்ற பாடலை வெளியிட்டு விருந்தளித்தது படக்குழு.
இதையடுத்து விஸ்வாசம் படத்தின் இரண்டாவது பாடலான, வேட்டிகட்டு எனும் பாடலின் லிரிக் வீடியோ நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் படத்தின் மொத்த பாடலும் இன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதன்படி அனைத்து பாடல்களையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
Loading More post
ஓபிஎஸ் வாகனத்தில் இருந்த ஈபிஎஸ் போட்டோவை கிழித்து செருப்பால் அடித்த ஆதரவாளர்கள்!
சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் மனைவிகளிடம் பேசி சமாதானப்படுத்த உத்தவ் மனைவி முயற்சி!
‘அம்மாவின் இதயத்தில் இருந்து... என் எதிர்காலத்தை...’ - ஓ.பி.எஸ். உருக்கமான பேச்சு
வலுவான மும்பையை வீழ்த்தி மாஸ் காட்டிய ம.பி அணி.. முதல்முறையாக வசமானது ரஞ்சிக் கோப்பை!
அட்லியுடனான கெமிஸ்ட்ரி.. ஜவான் சீக்ரெட்களை உடைத்த ஷாருக் கான்!
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'