ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது ஸ்டாலினின் விருப்பம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவச் சிலை, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை திறந்து வைக்கப்பட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “நான் இன்று மிகுந்த மகிழ்ச்சியில் பூரித்து போயிருக்கிறேன். திமுக அரசியல் வரலாற்றில் முக்கியமான நாள் மட்டுமல்ல, என்னுடைய வாழ்விலும் இன்று மறக்க முடியாத நாள். அதேபோல தமிழர்களின் வாழ்விலும், வளர்ச்சியிலும் இன்று முக்கியமான, மறக்க முடியாத நாள்.
வேறுபாடற்ற இந்தியாவை உருவாக்க நாம் இங்கு கூடியிருக்கிறோம். மோடியின் ஆட்சியில் இந்தியா 15 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது. சாடிஸ்ட் பிரதமராக நரேந்திர மோடி செயல்பட்டு கொண்டிருக்கிறார். தன்னையே ரிசர்வ் வங்கியாக, தன்னையே வருமான வரித்துறையாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறார் மோடி.
நாட்டை ராகுல்காந்தி காப்பாற்ற வேண்டும். எனவே ராகுல் காந்தியை பிரதமராக்க முன்மொழிறேன். மேடையில் மற்ற தலைவர்களும் ராகுலை வேட்பாளராக ஆதரிக்க வேண்டும். ராகுல் காந்தியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். ராகுல் காந்தியே வருகே. நல்லாட்சி தருக” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதலமைச்சர், “மறைந்த திமுக தலைவரின் சிலையை தற்போதைய திமுக தலைவர் திறந்து வைத்துள்ளார். அந்த விழாவிற்கு பல்வேறு மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது ஸ்டாலினின் விருப்பம். கூட்டணி அறிவித்த பிறகே யார் யார் எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியும்” என தெரிவித்தார்.
Loading More post
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வேலூர் சிறையில் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியதாக வழக்கு: முருகன் விடுதலை
"பாலியல் வக்கிரம் என்பது சீமானின் ஒரு அங்கம்" - ஜோதிமணி எம்.பி மீண்டும் குற்றச்சாட்டு
சென்னை சுற்றுவட்டாரத்தில் கிளஸ்டராக உருவாகும் கொரோனா - சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!