[X] Close

கலைஞர் சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி 

Sonia-Gandhi-opens-the-karunanidhi-s-statue-in-Anna-Arivalayam

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சிலையை அண்ணா அறிவாலயத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார். 

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் மாதம் காலமானார். அவரது மறைவுக்கு பின் திமுக தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் கருணாநிதியின் சிலை அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்படும் என திமுக அறிவித்தது.  


Advertisement

மேலும் அண்ணா அறிவாலயத்தில் ஏற்கெனவே இருந்த அண்ணா சிலைக்கு அருகில் கலைஞர் சிலை அமைக்கப்படும் என்றும், அண்ணா சிலை புனரமைக்கப்பட்டு மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்படும் என்றும் திமுக அறிவித்திருந்தது. இந்தச் சிலை திறப்பு விழாவில் அகில இந்திய தலைவர்கள்  கலந்து கொண்டு சிலையை திறந்து வைப்பார்கள் எனவும் திமுக தெரிவித்தது. 

 

அதன்படி சமீபத்தில் அண்ணா சிலை அப்புறப்படுத்தப்பட்டு, புனரமைக்கும் வேலை நடந்து இன்று காலை அவரது சிலை திறக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாலை 5 மணியளவில் கருணாநிதியின் சிலைத் திறப்பு விழா நடைபெற்றது. சரியாக மாலை 5.20 மணியளவில் கருணாநிதியின் சிலையை ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார். 


Advertisement

மு.கருணாநிதி சிலைத் திறப்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, அரசியல் தலைவர்கள் டி.ராஜா, மதிமுகவின் வைகோ, பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா, முத்தரசன், திருமாவளவன், ஜி.கே.வாசன், நடிகர்கள் ரஜினிகாந்த், நாசர், பிரபு, வடிவேலு, விவேக், மயில்சாமி உள்ளிட்டோருடன் கவிஞர் வைரமுத்து உள்ளிட்டவர்கள் விழாவில் பங்கேற்றனர். மேலும் இவ்விழாவில் பல திமுக பிரமுகர்களும் கலந்து கொண்டனர். 


Advertisement

Advertisement
[X] Close