இன்றும் ஆதிக்கம் செலுத்துவோம்: இஷாந்த் சர்மா நம்பிக்கை

இன்றும் ஆதிக்கம் செலுத்துவோம்: இஷாந்த் சர்மா நம்பிக்கை
இன்றும் ஆதிக்கம் செலுத்துவோம்: இஷாந்த் சர்மா நம்பிக்கை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளும் ஆதிக்கம் செலுத்துவோம் என்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் நடந்து வருகிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரோன் பின்ச் 50, ஹாரிஸ் 70, டிராவிஸ் ஹெட் 58 ரன்கள் எடுத்தனர்.

இந்திய அணி தரப்பில் இஷாந்த் சர்மா 4 விக்கெட்டுகளை சாய்த்தார். பும்ரா, உமேஷ் யாதவ், விஹாரி தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர். பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 172 ரன் எடுத்திருந்தது. விராத் கோலி 82 ரன்னுடனும் ரஹானே 51 ரன்னுடன் களத்தில்; இருந்தனர்.

இந்நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, முதல் நாளில் சரியாக பந்துவீசவில்லை. இரண்டாவது நாளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதோடு அதிகமாக நோ-பாலும் வீசினார். இது பற்றி ஆஸ்திரேலிய மீடியா அதிகமாக விவாதித்தது.

இதனால் அதிருப்தி அடைந்த இஷாந்த் சர்மா செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘இது தொடர்பான கேள்விகளுக்கு ஆஸ்திரேலிய மீடியாவே பதில் சொல்லலாம். நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடி வருகிறேன். கிரிக்கெட்டில் இது சகஜம்தான். ஏனென்றால் நானும் மனிதன்தான். தவறிழைப்பது மனித இயல்பு தான். அதனால் இது பற்றி எனக்கு கவலை இல்லை.

இக்கட்டான சூழ்நிலையில் விக்கெட் வீழ்த்துவது மூத்த வீரர் என்ற முறையில் எனது கடமை. எனக்கு அந்த பொறுப்பு இருக்கிறது. இப்போது அதை செய்துள்ளேன். முதல் நாள் ஆடுகளம் மெதுவாக இருந்தால் விக்கெட் எடுக்க முடியவில்லை.

இரண்டாவது நாள் ஆட்டத்தை நல்ல நிலையில் முடித்துள்ளோம். தற்போது போட்டி இரு அணிக்கும் சரிசம வாய்ப்பில் இருப்பதாக கருதுகிறேன். 3-வது நாளும் (இன்றும்) நாங்கள் ஆதிக்கம் செலுத்துவோம்’’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com