அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படத்தின் இரண்டாவது பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அஜித்துடன் இயக்குநர் சிவா ‘விஸ்வாசம்’ படத்தின் மூலம் 4வது முறையாக கூட்டணி சேர்ந்தார். எனவே அதிகமான எதிர்பார்ப்பு இப்படத்திற்கு உருவாகியது. இந்தப் படம் பொங்கல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரை நவம்பர் 27 ஆம் தேதி படக்குழுவினர் வெளியிட்டனர். எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென்று மோஷன் போஸ்டர் விடப்பட்டாலும் வழக்கம்போல் அஜித் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.
இதைத்தொடர்ந்து ‘அடிச்சு தூக்கு’ என்ற பாடலை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்தளித்தது படக்குழு. குத்துப்பாடலான அடிச்சுத்தூக்கு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் இரண்டாவது பாடலான, வேட்டிகட்டு எனும் பாடலின் லிரிக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடல் வெளியான சிறிது நேரத்திலேயே ட்விட்டர் ட்ரெண்டிங்கில் சென்னை மற்றும் இந்திய அளவில் முதலிடம் பிடித்தது.
விஸ்வாசம் படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார். நயன்தாரா, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ள விஸ்வாசம் ஜனவரி 10ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையே அஜித் நடிப்பில் சதுரங்கவேட்டை இயக்குநர் வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது. இந்தப்படம் 2019 மே1ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அஜித் நடிக்கும் திரைப்படம் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!