சென்னை - சேலம் இடையேயான எட்டுவழிச்சாலை அமைப்பதற்கு 11% சதவிகிதம் மக்கள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை-சேலம் எட்டுவழி சாலைக்கு தொடக்கம் முதலே பொது மக்கள் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதிப்பை குறைக்க மாற்றம் எடுத்துள்ளதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்தது. மேலும் சென்னை டு சேலம் இடையேயான 8 வழி பசுமைச் சாலை திட்டம் முதல்கட்டமாக 6 வழிச்சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்தது. இது தொடர்பாக 8 வழிச்சாலை திட்டத்தில் சில மாற்றங்களை செய்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிக்கையும் அனுப்பியது.
மேலும் எதிர்காலத்தில் வாகனப் பெருக்கத்தை கணக்கில்கொண்டு 8வழிச் சாலையாக மாற்றம் செய்ய வாய்ப்புள்ளதாக திருத்தப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டது. எனினும் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்காக கிராம மக்கள் அனைவரிடமும் பசுமை வழிச்சாலைக்கான கருத்து தெரிவிப்பு கூட்டமும் நடைப்பெற்றது.
இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் எட்டுவழிச் சாலைக்கு 11% பேர்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்று கூறியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சென்னை - சேலம் இடையேயான 8 வழிச்சாலைக்கு 89% பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றும் 11% பேர்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.
மேலும் 30 ஆண்டுகளுக்கு முன்பே வெளிநாடுகளில் 8,10 வழிச் சாலைகள் அமைக்கப்பட்டன. வெளிநாடுகளில் தொழில்வளம் பெருகி மக்கள் சிறப்புடன் வாழ்கிறார்கள். நம் நாட்டில் தற்போதுதான் 2, 4 வழிச்சாலைகள் அமைக்கப்படுகின்றன. தமிழக மக்கள் சிறப்புடன் வாழ வேண்டும் என்பதே அரசின் விருப்பம். யாரையும் பாதிப்புக்குள்ளாக்குவது அரசின் நோக்கம் அல்ல என்று தெரிவித்தார். 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் வழங்குபவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படுகிறது என்றும் அனைவரையும் சமாதானப்படுத்தித்தான் எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்