தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் தடியடி நடத்தி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனிடையே அந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுவை தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தது.
பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்தும், பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு தடை கோரியும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. ஆனால், தமிழக அரசின் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது எனத் தெரிவித்தது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக இதனை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்தது. ஆய்வு மேற்கொண்ட அக்குழு சீல் இடப்பட்ட அறிக்கை ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. அதில், ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் முடிவை நியாயப்படுத்த முடியாது. ஆலையை மூட உத்தரவிட்டது இயற்கை நியதிக்கு முரணானது. முறையாக நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 3 வாரத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொள்ள வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆணை பிறப்பித்துள்ளது. ஆலைக்கு உடடினயாக மின்சார வசதி கொடுக்க வண்டும் எனவும், ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை கண்காணிக்க குழு அமைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் முடிவுக்கு எதிராக வேதாந்தா குழுமம் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி