[X] Close

மாற்றுத் திறனாளி மாணவிக்கு ஆட்டோவில் பாலியல் தொல்லை...!

Sexual-Harassment-to-Physically-challenged-student

வேலூரில் மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.


Advertisement

வேலூர் மாவட்டத்தை அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மாற்றுத் திறனாளி மாணவியான இவர் அருகே உள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு பி.காம் படித்து வருகிறார். மாணவி கல்லூரிக்கு தினசரி ஆட்டோவில் செல்வது வழக்கம். மணிவண்ணன் என்ற ஆட்டோ ஓட்டுநர்தான் மாணவியை தினசரி கல்லூரிக்கு அழைத்துச் செல்வது மட்டுமில்லால், மீண்டும் வீட்டிற்கு வந்து இறக்கிவிடுவார்.  இதனைப் பயன்படுத்தி மாணவியிடம், மணிவண்ணன் நெருக்கமாகப் பழக திட்டமிட்டுள்ளார்.


Advertisement

இதனையடுத்து கடந்த 12-ம் தேதி ‘அமிர்தி வனப்பூங்காவுக்குப் போகலாம்’ என்று மாணவியைக் கட்டாயப்படுத்தியுள்ளார் ஆட்டோ டிரைவர் மணிவண்ணன். ஆனால் மாணவி வர மறுத்ததால், ஆட்டோவில் வைத்தே மாணவியை மணிவண்ணன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஆட்டோ டிரைவரின் அத்துமீறலைத் தன் பெற்றோரிடம் கூறி, கதறி அழுதுள்ளார் மாணவி சுதா. உடனடியாக பெற்றோர், போலீஸில் புகார் அளித்தனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் மணிவண்ணன கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close