நாடாளுமன்ற வளாகத்திற்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வேடத்தில் வந்த எம்.பி. சிவப்பிரசாத் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
தங்களது மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி மத்திய அரசுக்கு ஆந்திர அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் மத்திய அரசு இந்தக் கோரிக்கையை இதுவரை நிறைவேற்றவில்லை. முன்னதாக ஆந்திராவின் ஆளுங்கட்சியான தெலுங்குதேசம் கட்சி, பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகி தனது எதிர்ப்பை பதிவு செய்தது. அத்துடன் மாநில சிறப்பு அந்தஸ்துக்காக நாடாளுமன்றத்தில் தெலுங்குதேசம் கட்சி எம்பிக்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக எம்.பி. சிவப்பிரசாத் விதவிதமான வேடங்கள் அணிந்து வந்து நாடாளுமன்ற வளாகத்தில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தி வருகிறார். நாரதமுனி, பள்ளி மாணவர், ஹிட்லர் என இவரின் வேடங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. விதவிதமான வேடங்கள் மூலம் மக்கள் மற்றும் அரசின் கவனத்தை பெற்று தங்கள் கோரிக்கையை முன்வைப்பதே இவரது வழக்கம்.
இந்நிலையில் நேற்று நாடாளுமன்ற வளாகத்திற்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வேடத்தில் வந்த சிவப்பிரசாத் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். மஞ்சள் துண்டு, சக்கர நாற்காலி, கருப்பு கண்ணாடி என அப்படியே கருணாநிதியை நினைவு கூறும் விதமாக நாடாளுமன்ற வளாகத்துக்கு வந்த சிவப்பிரசாத், சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு கையசைத்துக்கொண்டு போனார்.
தெலுங்கு திரையுலகில் நடிகராக தனது வாழ்க்கையை தொடங்கிய சிவப்பிரசாத் பிறகு அரசியலில் காலடி வைத்தார். இவர் 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!