அணை பாதுகாப்பு மசோதாவில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
நேற்றைய மக்களவைக் கூட்டத்தொடரில் அணை பாதுகாப்பு மசோதா கொண்டுவரப்பட்டது. இந்த மசோதா அமல்படுத்தப்பட்டால் மாநில அரசுகளின் அதிகாரத்தில் இருக்கும் அணைகள் கட்டுப்பாடுகள் மத்திய அரசின் வசம் சென்றுவிடும். இதனால், முன்னதாக இந்த மசோதா அமல்படுத்தப்படுவதற்கு முன்னரே மாநிலக்கட்சிகளால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் பழனிசாமி கடந்த ஜூன் மாதமே பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் நேற்று இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதலமைச்சர் அணை பாதுகாப்பு மசோதாவை வாபஸ் பெற வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார். அதில், மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அணைகள் வனப்பகுதிக்குள் இருந்தால், அந்த அணைகளை மாநில அதிகாரிகள் சென்று நிர்வாகிக்கும் உரிமை மறுக்கப்பட்டிருப்பதை உடனே ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அத்துடன் அணைகளை மாநில அரசு அதிகாரிகளே பராமரிப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப் பெற வேண்டும் கோரியுள்ளார். மாநில அரசுகளின் கருத்தைக் கேட்காமல் மக்களவையில் மசோதா அறிமுகப்பட்டுள்ளதாக தெரிவித்து முதல்வர், அனைத்து மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்த பின்னர் மசோதாவிற்கு ஒப்புதல் தர வேண்டும் என கூறியுள்ளார். மேலும் தமிழக நலன் அணை மசோதாவில் கருத்தில் கொள்ளப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் அணை பாதுகாப்பு சட்டமசோதா 2018ல் பிரதமர் மோடி உடனே தலையிட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Loading More post
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
``ஒரு வாரத்தில் ஊழலை வெளிக்கொணர்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்”- அண்ணாமலை
குரூப் 2 தேர்வுகளுக்கான விடைகளை வெளியிட்டது TNPSC! இந்த லிங்க்-ல் அறியலாம்!
ஈ சாலா கப் சாத்தியமாகுமா? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!