Published : 14,Dec 2018 07:57 AM

உங்கள் "வாட்ஸ் அப்" பை அப்டேட் செய்தீர்களா ? புதிய தகவல்கள்

7-features-coming-to-WhatsApp

வாட்ஸ்அப் செயலி என்பது உலகம் முழுவதும் உள்ள தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலியாக அது உள்ளது. இந்தச் செயலியை கடந்த 2014ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியது. அதன்பின்னர் வாட்ஸ் அப்பில் பல புதிய அப்டேட்கள் கொண்டு வரப்பட்டன. அதன்படி புதிய 7 அப்டேட்டுகளை கொண்டு வர வாட்ஸ் அப் நிறுவனம் முடிவு செய்துள்ளது. என்ன அந்த அப்டேட்டுகள்?

1.டார்க் மோட்: (Dark mode)

வாட்ஸ் அப் செயலியின் பின் பகுதியை கருப்பு நிறத்தில் மாற்றுக்கொள்ளும்படியான அப்டேட் இதுவாகும். இது மாதிரியான டார்க் மோட் ஏற்கெனவே யூ டியூப், ட்விட்டர் போன்ற செயலிகளில் உள்ளது. இரவு நேரத்தில் பயன்படுத்தும் போது கண்களுக்கு இதமாக உணர்வளிக்கும் வகையில் இந்த டார்க் மோட் பயன்படும்.

2.QR கோட் மூலம் தொடர்புகளை பகிர்தல் (Share contact info via QR)

இந்த அப்டேட் மூலம் எளிதாக தொடர்புகளை பகிர்ந்து கொள்ளலாம். ஒருமுறை இதில் கொடுக்கப்பட்டிருக்கும் QR கோடை மற்றவர்களிடம் பகிர்ந்தால் தொடர்புகளும் பகிர்ந்து கொள்ளப்படும். இது சமீபத்தில் இன்ஸ்டாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

3.குரூப் காலிங் ஷார்ட்கட் (Group calling shortcut )

இந்த அப்டேட் iOSல் ஏற்கெனவே நடைமுறைக்கு வந்துள்ளது. அதேபோல் வாட்ஸ் அப் பீட்டா வெர்சனிலும் சோதனையில் உள்ளது. அதன்படி வீடியோ காலுக்கு அருகில் புதிய ஐகான் இடம் பெற்று இருக்கும். அதை அழுத்துவதன் மூலம் நம் தொடர்பில் உள்ள (Contact List) எண்களை காட்டும் தனித்து காட்டும். அதில் இருந்து 3 பேரை நாம் குரூப் காலிங்கிற்கு தேர்வு செய்யலாம்

4. மல்டி ஷேர் ஃபைல்ஸ் (Multi-share Files )

வேறொரு செயலியில் இருந்து பகிரப்படும் பிடிஎஃப், ஆடியோ ஆகியவற்றை வாட்ஸ் அப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுடம் பகிரும் அப்டேட் இதுவாகும். அனுப்புவதற்கு முன் தகவல்களை சரிபார்க்கும் வசதியையும் ( a preview of the message ) இது வழங்கும்

5. புஷ் நோட்டிபிகேஷனில் நேரடியாக வீடியோக்களை காணும் முறை (View videos directly in the push notification )

இந்த அப்டேட் ஏற்கெனவே iOSல் நடைமுறையில் உள்ளது. புஷ் நோட்டிபிகேஷன் என்ற முறையிலேயே வீடியோக்களை காணும் வசதியை இந்த அப்டேட் வழங்கும்.

6. தொடர்புகளை தரம் பிரித்தல் (Ranking of contacts)

நாம் வாட்ஸ் அப்பில் இணைந்திருக்கும் எண்களை இந்த அப்டேட் தரம் பிரிக்கிறது. புகைப்படம், ஆடியோ, வீடியோ போன்றவற்றை பகிரும் எண்கள் முதல் தரமானவை என்றும், வெறும் எழுத்து மூலமான தகவல் பரிமாற்றம் செய்யப்படும் எண்கள் சராசரியான தரமிக்கவை என்றும் நாம் தவிர்க்கும் எண்களை மோசமான தரம் என்றும் இந்த அப்டேட் தரம் பிரிக்கிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்