மத்திய பிரதேச முதலமைச்சராக கமல்நாத்தை அறிவித்ததை அடுத்து, ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர்களை ராகுல்காந்தி இன்று அறிவிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வசம் இருந்த, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. யாரை முதல்வராக்குவது என்பதில் காங்கிரஸ் தலைமைக்கு சவாலாக இருக்கிறது. மத்தியப் பிரதேச முதலமைச்ச ரைத் தேர்ந்தெடுக்க, போபாலில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக்குப் பின் மூத்த தலைவர் கமல்நாத்தை முதல்வராக காங்கிரஸ் அறிவித்தது. அவர் இன்று பதவியேற்கிறார்.
(சச்சின் பைல்ட, அசோக் கெலாட்)
இதையடுத்து, ராஜஸ்தானில் முதல்வர் பதவிக்கு முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் ஆகிய இருவரிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. சச்சின் பைலட்டை முதலமைச்சராக அறிவிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாரை முதலமைச்சராக தேர்வு செய்வது என்பதற்காக நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட வில்லை. அதனால் இன்றும் அந்தக் கூட்டம் நடக்கிறது. இதில் யார் முதலமைச்சர் என்பது முடிவு செய்யப்பட்டு விடும் என்று தெரிகிறது.
(புபேஷ் பாஹெல்)
சத்தீஸ்கரில், மக்களவை எம்.பி., தம்ராத்வாஜ் சாஹூ, மாநிலத் தலைவர் புபேஷ் பாஹெல், மூத்த தலைவர் டி.எஸ். சிங்தியோ ஆகியோர் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. இதில் புபேஷ் பெஹலுக்கு முதலமைச்சர் பதவி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்