மத்தியப் பிரதேசத்தில் வாழ்ந்து அங்கேதான் இறப்பேன் என முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த பாஜக இந்தத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்துள்ளது. மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி கண்டது. பாஜக 109 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆட்சியமைக்க 116 தொகுதிகள் தேவை என்ற நிலையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
ஆனால் 2 இடங்களில் வெற்றி கண்ட பகுஜன் சமாஜ், 1 இடத்தில் வெற்றி பெற்ற சமாஜ் வாதி ஆகியவை காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்துள்ளன. எனவே முதல்வர் தேர்வில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அநேகமாக காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் ம.பி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
இதனிடையே மத்தியப் பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அத்துடன் தேர்தல் தோல்விக்கு தானே பொறுப்பு ஏற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மாநிலத்தில் விவசாயிகளின் துயரங்களை முடிவுக்கு கொண்டுவர ஆசைப்பட்டதாக பேசிய அவர், 15 ஆண்டுகாலம் பாஜக ஆட்சி செய்ய ஆதரவு தந்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். மாநில அரசியலில்தான் தீவிரமாக ஈடுபடுவேன். மத்திய அரசியலில் ஈடுபட விருப்பம் இல்லை என்ற அவர் மத்தியப் பிரதேசத்தில் வாழ்ந்து அங்கேயே இறப்பேன் எனவும் கூறினார். மத்தியப் பிரதேசத்தை தொடர்ந்து பாதுகாப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.
Loading More post
தோனி, ரோகித், கோலி இல்லாத முதல் ஐபிஎல் பைனல்!
”என் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் என் மீது ரெய்டு” - கார்த்தி சிதம்பரம்
'ஆத்திகர், நாத்திகர்கள் ஒரு சேர உருவாக்கியதுதான் திராவிட மாடல்' - அமைச்சர் சேகர் பாபு
பெர்முடா முக்கோணத்தில் கப்பல் காணாமல் போனால் பணம் ரீஃபண்ட்! அறிவிப்பும் கேள்விகளும்!
கோப்பையை வெல்லப் போவது யார்? - ஐபிஎல் ஃபைனலை காண மோடி, அமித் ஷா நேரில் வருகை?
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி