தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று நாளை புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கஜா புயலுக்குப் பின் தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. வட மாவட்டங்களை பொறுத்தவரை வறண்ட வானிலையே காணப்பட்டது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது சென்னையிலிருந்து ஆயிரத்து 170 கிலோ மீட்டர் தென்கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ளது.
இது அடுத்து புயலாக மாறி வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து தெற்கு ஆந்திராவை நோக்கி நகரக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வரும் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
மீனவர்கள் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரை திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நாளை புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதால் எண்ணூர், நாகை, கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
Loading More post
குஜராத்: தொழிற்சாலை சுவர் இடிந்து விழுந்து 12 பேர் உயிரிழப்பு - 20 பேரின் நிலை என்ன?
’சர்வாதிகாரிகள் மரித்துப் போவார்கள்’-கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரைன் அதிபர் பேச்சு!
’குற்றவாளிகள் நிரபராதிகள் அல்ல’ - பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து காங். போராட்டம் அறிவிப்பு
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் ஹர்திக் பட்டேல் - விரைவில் பாஜகவில் ஐக்கியமா?
தி.மலையில் கருணாநிதி சிலை வைக்கும் இடம் குறித்த வழக்கில் உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்