[X] Close

மிக விரைவில் தேர்தல் நடக்கும்: ஓபிஎஸ்

ops-says-election-will-be-held-soon

ஆர்.கே நகர் தொகுதியில் இடைத்தேர்தல் மிக விரைவில் நடைபெறும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை மறுநாள் (12-ம் தேதி) இடைத்தேர்தல் நடைபெற இருந்தது. இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், நேற்று இரவு ஆர்.கே. நகர் தேர்தலை ரத்து செய்து, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த ரத்து தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கக்கூடாது என்ற நிலையை உருவாக்கவே தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை ரத்து செய்துள்ளது. வருமானவரித்துறை கைப்பற்றிய ஆவணங்கள் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை ரத்து செய்துள்ளது என்று கூறிய அவர், மிக விரைவில் ஆர்.கே நகர் தேர்தல் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close