ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஹனுமா விஹாரி களமிறங்குவார் என்று தெரிகிறது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மழை காரணமாக 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது.
அடிலெய்டில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது. புஜாரா முதல் இன்னிங்ஸில் சதம் அடித்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 71 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் இளம் தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷா, பங்கேற்பதாக இருந்தது. ஆஸ்திரேலிய போர்டு லெவன் அணியுடன் நடந்த பயிற்சி ஆட்டத்தின் போது அவர் சிறப்பாக செயல்பட்டார். இதனால் அவரை, முரளி விஜய்-க்கு பதிலாக தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க அணி நிர்வாகம் முடிவு செய்திருந்தது. ஆனால், பயிற்சி ஆட்டத்தின் போது எல்லைக் கோட்டின் அருகே வந்த பந்தை பிடிக்க முயன்றபோது அவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது.
அவரால் நடக்க முடியவில்லை. அவரை ஸ்கேன் செய்து பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். காயம் அதிகமாக இருப்பதால் அவர் சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து அவர் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்காமல் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் அவர் குணமாகிவிட்டார் என்று கூறப்பட்டது. பயிற்சியின் போது அவர் கலந்துகொண்டார். இதனால் அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் நேற்று நடந்த வலைப்பயிற்சியில் அவர் கலந்துகொள்ளவில்லை. அவரது காயம் இன்னும் குணமாகவில்லை என்று தெரிகிறது. அதோடு, ரோகித் சர்மாவும் காயமடைந்துள்ளார். முதல் டெஸ்ட் போட்டியின்போது அவரது பின் முதுகில் காயம் ஏற்பட்டது. அது குணமாகாததால் 2-வது டெஸ்ட் போட்டியில் ஆட மாட்டார் என்று தெரிகிறது.
நேற்றைய வலைப் பயிற்சியிலும் ரோகித் பங்கேற்கவில்லை. ஹனுமா விஹாரி தொடர்ந்து பயிற்சியை மேற்கொண்டார். இதனால், 2-வது டெஸ்ட் போட்டியில் ரோகித்துக்குப் பதிலாக விஹாரி களமிறங்குவார் என்று கூறப்படுகிறது. என்றாலும் அதிகாரபூர்வ அறிவிப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவிக்கும்.
முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், தொடக்க ஆட்டக்காரர்கள் ராகுல் 2 ரன்னும், முரளி விஜய் 11 ரன்னும் எடுத்தனர். 2 வது இன்னிங்ஸில் ராகுல் 44 ரன்னும் முரளி விஜய் 18 ரன்னும் எடுத்தனர்.
Loading More post
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!