Published : 12,Dec 2018 07:38 AM

“கஜா புயல் அறிக்கை தாமதமாக தமிழக அரசே காரணம்”- மத்திய அரசு

Gaja-cyclone-report--center-criticized-tn-government-for-delay

கஜா புயல் பாதிப்பு குறித்த அறிக்கை தாமதமாக தமிழக அரசே காரணம் என மத்திய அரசு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்துள்ளது.

நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களை புரட்டிப்போட்ட கஜா புயலுக்கு தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. ஆடு, மாடுகள் உயிரிழந்ததோடு மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய முந்திரி, தென்னை, வாழை மரங்கள் வேராடு வேராக சாய்ந்தன. இதனால் மக்கள் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் தவித்தனர்.

புயல் பாதித்த பகுதிகளை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். அத்துடன் மத்தியக் குழுவும் புயல் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

இதனிடையே கஜா புயல் தொடர்பான வழக்கு ஒன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கஜா புயல் தொடர்பான மத்திய அரசின் அறிக்கை தாமதாக தமிழக அரசே காரணம் என மத்திய அரசு தெரிவித்தது. தமிழக அரசிடம் கேட்கப்பட்ட சில விவரங்களை தமிழக அரசு இன்னும் வழங்கவில்லை எனவும் மத்திய அரசு கூறியுள்ளது. இதனிடையே மத்திய அரசு கேட்ட விவரங்களை இன்று சமர்ப்பித்து விடுவோம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்