[X] Close

வேலூர் அருகே பள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை..!

Girl-Tortured-in-vellore

வேலூர் மாவட்டத்தில் பள்ளி சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆட்டோ ஓட்டுநர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Advertisement

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள பகுதியை சேர்ந்த சிறுமி சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 10 மாதங்களாக சக மாணவிகளுடன் வாடகை ஆட்டோவில் பள்ளிக்கு சென்று வரும் நிலையில் நேற்று காலையும் வழக்கம்போல  ஆட்டோவில் மாணவி பள்ளிக்கு சென்றுள்ளார்.


Advertisement

அப்போது அதே பகுதியில் உள்ள மற்றொரு ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் பள்ளிக்கு அருகே இருந்து சிறுமியை காரில் கடத்தியுள்ளனர். பின்னர் பெங்களூருவிற்கு சிறுமியை காரிலேயே கடத்திச் சென்ற அந்த நபர்கள் அங்கு வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிகிறது.

இதனிடையே மாணவியின் தந்தை மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் மூவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள இரண்டு பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இதுதவிர கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர், ஏற்கெனவே பணத்திற்காக ஒரு பெண்ணை கடத்திச் சென்று ரூபாய் 20 லட்சம் கேட்டு மிரட்டியதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பள்ளி மாணவியை கடத்தி சென்று 5 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் வேலூர் மாவட்ட பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close