செல்ஃபி எடுக்கும்போது ஃபிரேமில் தெரிந்த நபருக்கு தர்ம அடி

செல்ஃபி எடுக்கும்போது ஃபிரேமில் தெரிந்த நபருக்கு தர்ம அடி
செல்ஃபி எடுக்கும்போது ஃபிரேமில் தெரிந்த நபருக்கு தர்ம அடி

பெங்களூரில் செல்போனில் செல்ஃபி எடுக்கும்போது ஃபிரேமில் தெரிந்த நபரை 5 பேர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூர் உத்தரஹள்ளி என்ற இடத்திற்கு 15 வயதான ஜப்பிஹான் என்பவர் அவரது தம்பியுடன் சுற்றுலா சென்றுள்ளார். அப்போது இரண்டு பேர் செல்போனில் செல்ஃபி புகைப்படம் எடுத்து கொண்டிருந்தனர். அவர்கள் புகைப்படம் எடுக்கும்போது அவர்களின் பின்புறம் ஜப்பி ஹான் நின்றுள்ளார். அது தெரியாமல் அவர்கள் புகைப்படம் எடுக்க பார்த்துள்ளனர்.

இதையடுத்து ஜப்பிஹானை அங்கிருந்து சற்று நகருமாறு அந்த இரண்டு பேரும் கூறியுள்ளனர். ஆனால் ஜப்பி ஹான் அலட்சியமாக நகர்ந்து சென்றதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த இரண்டு பேருடன் வந்த மேலும் நான்கு பேர் சேர்ந்து ஜப்பி ஹானை தாக்கியுள்ளனர்.

இதில் ஜப்பிஹானின் பல் உடைந்தது. மேலும் படுகாயம் அடைந்தார். இதையடுத்து ஜப்பிஹானின் தம்பி அவரது தந்தை முபாரக்கிற்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து வந்த அவரது தந்தை ஜப்பிஹானை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தார்.

இதையடுத்து முபாரக் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், “தாக்கியவர்கள் யார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. 5 ஆண்கள் ஒரு பெண் கொண்ட கும்பல் ஜப்பிஹானை தாக்கியுள்ளனர். அவர்கள் 6 பேரும் மைனர் என்பதால் முபாரக்கிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றோம்” எனத் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com