Published : 11,Dec 2018 03:22 AM

தெலங்கானாவில் டிஆர்எஸ் முன்னிலை

TRS-Leading-in-Telangana

தெலங்கானாவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் ,அங்கு தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி முன்னிலை வகிக்கிறது.

தெலங்கானாவில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி 21 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதற்கு அடுத்தப்படியாக காங்கிரஸ் 14 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாரதிய ஜனதா கட்சி 1 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

தெலங்கானாவில் சந்திர சேகர் ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருந்தன. அதன்படி அக்கட்சியே வாக்கு எண்ணிக்கை நிலவரத்திலும் முன்னிலை வகிக்கிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்