Published : 11,Dec 2018 03:02 AM

ராகுல் காந்தி வீட்டின் முன் தொண்டர்கள் பூஜை!

Congress-workers-perform--hawan--outside-Rahul-Gandhi-s-residence-in-Delhi

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வீட்டின் முன், காங்கிரஸ் தொண்டர்கள் அக்னிகுண்டம் அமைத்து பூஜை செய்து வருகின்றனர்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் ஆட்சியமைக்கப்போவது யார் என்ற தகவல்கள் பிற்பகலுக்குள் தெரியவரும். வாக்கு எண்ணிக்கைகாக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவு நாடு முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்த 5 மாநில தேர்தல் முடிவு ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வேண்டும் என்று அக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் வீட்டின் முன், காங்கிரஸ் தொண்டர்கள் இன்று காலை சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர். அவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்களின் புகைப்படங்களை வைத்து பூஜை செய்து வருகின்றனர். அக்னிகுண்டம் வளர்த்தும் மலர்கள் தூவியும் பூஜை செய்கின்றனர். 
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்