[X] Close

இன்று மாலை வெளியாகிறது அஜித்தின்‘அடிச்சி தூக்கு’சிங்கிள் ட்ராக்

vishvasam-audio-single-track-will-be-released-today-7-pm

‘விஸ்வாசம்’ படத்தின் ‘அடிச்சி தூக்கு’ சிங்கிள் ட்ராக் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘விஸ்வாசம்’ படத்தின் மூலம் அஜித்துடன் 4வது முறையாக இயக்குநர் சிவா கூட்டணி சேர்ந்துள்ளார். எனவே அதிகமான எதிர்பார்ப்பு இப்படத்திற்கு உருவாகியது.


Advertisement

இந்தப் படம் பொங்கல் அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ படமும் பொங்கல் அன்று வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதனால் வரும் பொங்கல் அஜித்-ரஜினி மோதும் பொங்கலாக பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் நவம்பர் 27 ஆம் தேதி படக்குழுவினர் வெளியிட்டனர். எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென்று மோஷன் போஸ்டர் விடப்பட்டாலும் வழக்கம்போல் அஜித் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். போஸ்டர் வெளியாகி சிறிது நேரத்தில் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது. இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்து வருகிறது.


Advertisement

‘விஸ்வாசம்’ படத்தின் அறிவிப்புக்குப் பின் தங்களது அறிவிப்பை வெளியிட்ட ‘பேட்ட’ படத்தின் படக்குழு அடுத்தடுத்து அப்டேட் கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. ஏற்கனவே இரண்டு பாடல்களை வெளியிட்ட ‘பேட்ட’ படக்குழு நேற்று முழு பாடல் ஆல்பத்தை வெளியிட்டது.

இந்நிகழ்ச்சி சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. இதனால் கொந்தளித்த அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் போட்டு தாக்கினர். சத்யஜோதி நிறுவனத்திடம் ‘விஸ்வாசம்’ அப்டேட் குறித்து பல கோரிக்கைகளை முன் வைத்தனர்.

இதையடுத்து ‘விஸ்வாசம்’ படத்தின் ‘அடிச்சி தூக்கு’ சிங்கிள் ட்ராக் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.


Advertisement

Advertisement
[X] Close