Published : 10,Dec 2018 08:11 AM
குழந்தையை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட தந்தை

சென்னையில் 3 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு தந்தை தூக்கிடு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பனையூர், 22 நிழற்சாலையில் வாட்ச்மேனாக பணியாற்றி வந்தவர் ரங்கநாதன். இவருக்கு கிஷோர் என்ற 3 வயதில் மகன் இருந்தான். இந்நிலையில், நேற்றிரவு மனைவி தூங்கும் போது கிஷோருக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் ரங்கநாதன்.
இன்று காலையில் மனைவி எழுந்து பார்க்கும்போது கணவர் ரங்கநாதனும் குழந்தை கிஷோரும் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியுற்று கதறி அழுதார். சத்தத்தை கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த கானத்தூர் போலீசார் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.