[X] Close

5 மாநில தேர்தல் முடிவுகள்: நாளை வெளியாகிறது

5-state-assembly-elections-results-tomorrow

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியிடப்பட உள்ளன. 

சத்தீஷ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல்கள் சென்ற மாதம் 12ஆம் தேதி தொடங்கி கடந்த 7ஆம் தேதி வரை நடந்தன. இறுதிக்கட்டமாக கடந்த 7ஆம் தேதி ராஜஸ்தான் மற்றும் தெலங்கானாவில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. பெரும்பாலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதுமின்றி ஐந்து மாநில தேர்தலும் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. 

Read Also -> சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்வதாக மோசடி.. 5 வருடத்திற்கு பின் இருவர் கைது..


Advertisement

பதிவான வாக்குகளுடன் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டி ருக்கின்றன. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர் மாநிலங்களில் ஆளும் கட்சியாக உள்ள பாஜக, ஆட்சியைத் தக்க வைக்கும் எண்ணத்தில் உள்ளது. இந்த 3 மாநிலங்களிலும் ஆட்சியைக் கைப்பற்றும் நம்பிக்கையில் காங்கிரஸ் இருக்கிறது. மேலும், தெலங்கானாவில் ஆளும் ராஷ்ட்ரிய சமிதிக்கும் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேச கூட்டணிக்கும் பலத்த போட்டி நிலவியது. 

Read Also -> “சொன்னபடி ராமர் கோயிலை கட்டுங்கள்” பாஜகவுக்கு ஆர்.எஸ்.எஸ் வேண்டுகோள் 


Advertisement

நாளை காலை 8 மணிக்குத் தொடங்கி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் என்பதால், அடுத்த ஓரிரு மணி நேரத்தில் யாருக்கு வெற்றி என்பது தெரிய வந்து விடும். 


Advertisement

Advertisement
[X] Close