மதுரையில் நுாற்றாண்டு கடந்த ஆங்கிலேயர் கால பாலத்திற்கு கேக் வெட்டி பொதுமக்கள் பிறந்தநாள் கொண்டாடினர்.
மதுரை மாநகரின் உள்ள ஆங்கிலேயர்களுடைய கட்டடங்களின் அடையாளமாய் வைகை ஆற்றில் நடுவே இருக்கும் ஏ.வி.மேம்பாலம், 1886ஆம் ஆண்டில் ஆல்பர்ட் விக்டர் என்ற ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. அவரது பெயரின் சுருக்கமாக ஏ.வி.பாலம் என்று மக்களால் இது அழைக்கப்படுகிறது. இந்த பாலம் தனது ஆயுட்காலமான நுாற்றாண்டை கடந்தும் 33 ஆண்டுகளாக வீரியத்துடன் தாங்கி நிற்கிறது.
அழகுநயம்மிக்க வடிவமைப்பு, ஆங்கிலேயக் கட்டடக்கலையை எடுத்துரைக்கும் வகையில் 14 வளைவுகளை இந்தப் பாலம் கொண்டுள்ளது. இன்றுடன் 133வது வயதை தொடங்கும் இந்த பாலம், 1886ல் 2 லட்சத்து 80 ஆயிரம் செலவில் கட்டப்பட்டது. இதன் ஆயுள் காலம் ஐம்பது ஆண்டுகள் என நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், 100 ஆண்டுகளை தாண்டி இன்று 133ஆம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடும் அளவிற்கு கம்பீரமாக காட்சியளிக்கிறது.
இதனால் மதுரையை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வைகை நதி மக்கள் இயக்கம் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த பாலத்தின் கல்வெட்டிற்கு அருகே கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர். இந்த நிகழ்வு காண்போரை
நெகிழ்ச்சியடையச் செய்தது.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்