Published : 09,Apr 2017 09:59 AM

சென்னையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் சிக்கிய பேருந்து

Bus-Accident-in-Chennai-Anna-salai

சென்னை அண்ணா சாலையில் உள்ள ஜெமினி பாலம் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் மாநகர பேருந்தும், காரும் சிக்கியது.

சென்னை அண்ணா சதுக்கத்தில் இருந்து வடபழனி நோக்கி மாநகர பேருந்து சென்றுக்கொண்டிருந்து. ஜெமினி பாலம் அருகே உள்ள நிறுத்தத்தில் நிறுத்தியபோது சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் பேருந்து சிக்கியது. இதனைஅடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் பொதுமக்களின் உதவியுடன் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். பேருந்தின் பின்னால் வந்த காரும் பள்ளத்தில் சிக்கியது. ஜெமினி பாலம் அருகே மெட்ரோ ரயில்பணிகள் நடந்து வருகிறது. இதனால் அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்