[X] Close

தமிழில் பெயர் மாற்ற குழு - மாஃபா பாண்டியராஜன்

Tamil-Change-Name---Mafa-Pandiyarajan

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊர்கள், சாலைகள், தெருக்களில் பிறமொழி பெயர்களை தமிழில் பெயர் மாற்ற குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.


Advertisement

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊர்கள், சாலைகள், தெருக்களில் பிறமொழி பெயர்களை தமிழில் பெயர் மாற்ற குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் 2 வாரங்களில் அரசாணை பிறப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.


Advertisement

குறிப்பாக ஆங்கில மற்றும் சமஸ்கிருத மொழிகளில் உள்ள பெயர்கள் மாற்றப்படும் எனவும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்களின் பரிந்துரையின் பேரில் சுமார் 3 ஆயிரம் பெயர்கள் மாற்றப்பட இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அதன்பிறகு ட்ரிபிளிகேன் என்ற பெயர் திருவல்லிக்கேணி எனவும், தூத்துகொரின் என்பது தூத்துக்குடி எனவும் மாற்றப்படும் என மாஃபா. பாண்டியராஜன் தெரிவித்தார். பெயர் மாற்றப்படும் ஊர்களில் வேதாரண்யம், சீர்காழி, சிதம்பரம், ஸ்ரீரங்கம், விருத்தாசலம், ஸ்ரீபெரும்புதூர், ஸ்ரீவில்லிபுத்தூர், சேலம், விருதுநகர், ராமேஸ்வரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட ஊர்களும் அடங்கலாம் எனத்தெரிவித்தார்.


Advertisement

Advertisement
[X] Close