Published : 08,Dec 2018 07:46 AM

"ஒற்றை நோக்கத்தோடு வாழ்ந்தவர் பாரதி" ஆளுநர் புகழாரம்

tamil-nadu-governor-Banwarilal-Purohit-speaks-about-tamil-poet-Bharathiyar

மகாகவி பாரதியாரின் வார்த்தைகளை பின்பற்றுதல் அவசியம் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வலியுறுத்தியுள்ளார். 

மகாகவி பாரதியாரின் 136 ஆவது பிறந்த நாள் வரும் 11 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது . பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் வானவில் பண்பாட்டு மையம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள பாரதி திருவிழா கொண்டாட திட்டமிடப்பட்டது. அதன்படி அதன் தொடக்க விழா இன்று நடைபெற்றது. அவ்விழாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். 

கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் பேசிய ஆளுநர், பன்முகத்தன்மையுடன் திகழ்ந்த மகாகவி பாரதி, புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு வாழ்ந்தவர் என்றும் புகழாரம் சூட்டினார். ‌இன்னலில் இருப்பவரைக் கண்டும் உதவி செய்யாமல் இருந்தால், மனம் இறந்துவிட்டதாகவே கருதப்படும் என்ற பாரதியின் வார்த்தைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.‌‌ விழாவின் தொ‌டக்கத்தில் திரைப்பட இயக்குனர் கே.விஸ்வநாத்துக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் 'பாரதி' விருதை வழங்கினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்