[X] Close

பிரேசில் மாடலுக்கு ஆபாச படம்: பாடகர் மில்கா சிங் துபாயில் கைது!

singer-Mika-Singh-arrested-for-harassing-model-in-UAE

இளம் பிரேசில் மாடலுக்கு ஆபாசப் படங்களை அனுப்பியதாக பிரபல பாடகர் மில்கா சிங் கைது செய்யப்பட்டார். 

பிரபல பாடகர் தலேர் மெஹந்தியின் சகோதரர் மில்கா சிங். பாடகரான இவர், பல இந்தி படங்களில் நடித்தும் உள்ளார். மேடை நிகழ்ச்சிகளிலும் பாடி வருகிறார். டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இவர் துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்காக அங்கு சென்றிருந்தார். வியாழக்கிழ மை இந்தியா திரும்ப டிக்கெட் புக் செய்திருந்தார். 


Advertisement

ஆனால், விழாவில் 17 வயது பிரேசில் மாடல் ஒருவரை அவர் சந்தித்தார். இருவரும் நட்பாக பேசிக்கொண்டனர். பின்னர் இந்தி சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவாகக் கூறினார் மில்கா. இதையடுத்து இருவரும் போன் நம்பர்களை பரிமாறிகொண்டனர். சிறிது நேரத்தில் அந்தப் பெண்ணுக்கு ஆபாச படங்களை அனுப்பியுள்ளார் மில்கா சிங். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாடல், போலீசில் புகார் செய்தார். விசாரித்த துபாய் போலீசார் மில்கா சிங்கை கைது செய்தனர்.

இதுபற்றி ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்திய தூதர் நவ்தீப் சிங் சுரி கூறும்போது, ‘மில்கா கைது செய்யப்பட்டிருப்பது உண்மைதான். எங்கள் குழு அவரை விடுவிப்பதற்காக வேலைகளில் இறங்கியுள்ளது’ என்று தெரிவித்தார்.

மில்கா இதுபோன்று நடந்து கொள்வது முதன் முறையல்ல. இதற்கு முன் பாலிவுட் நடிகை ராக்கி சாவந்துக்கு பலவந்தமாக முத்தம் கொடுத்த தாக குற்றம் சாட்டப்பட்டிருந்தார். 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close