ஹோட்டலை மூடச் சொன்ன ஆத்திரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்..!

ஹோட்டலை மூடச் சொன்ன ஆத்திரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்..!
ஹோட்டலை மூடச் சொன்ன ஆத்திரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்..!

ஹோட்டலை மூடச் சொன்ன ஆத்திரத்தில் சப்-இன்ஸ்பெக்டரை அடித்து உதைத்த ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை அண்ணா சாலையில் செயல்பட்டு வரும் ஹோட்டல் ஒன்று வழக்கத்திற்கு மாறாக அதிக நேரம் திறந்து வைக்கப்பட்டதாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி ஏன் இவ்வளவு நேரம் ஹோட்டலை திறந்து வைத்துள்ளீர்கள்..? உடனடியாக ஹோட்டலை மூடுங்கள் என அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது. அதற்கு ஹோட்டல் ஊழியர்கள் மறுப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

இதுதொடர்பான வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ஹோட்டல் ஊழியர்கள் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தியை தாக்கியதாக தெரிகிறது. ஹோட்டல் ஊழியர்களான கிருஷ்ணமூர்த்தி, ராசுக்குட்டி, சகிக்குமார், திருநாவுக்கரசு, சுனில், அப்துல் ரகுமான் ஆகிய 6 பேர் இணைந்து கொண்டு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியதாக தெரிகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் சம்பந்தப்பட்ட ஹோட்டல் ஊழியர்களான 6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com