Published : 05,Dec 2018 01:59 AM

இன்று ஜெயலலிதாவின் 2-ஆம் ஆண்டு நினைவு தினம்..!

Former-CM-Jayalalithaa-2nd-Year-Death-Anniversary-today

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். 75 நாள்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி 2016-ஆம் ஆண்டு டிசம்பர் ஐந்தாம் தேதி அவர் காலமானார். இந்நிலையில் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்த உள்ளனர். அண்ணா சாலையில் இருந்து ஜெயலலிதா நினைவிடத்திற்கு அதிமுகவினர் அமைதி ஊர்வலம் சென்று அஞ்சலி செலுத்துகின்றனர். அமமுக சார்பிலும் ஊர்வலம் நடைபெற உள்ளது.

இதுதவிரவும் ஏராளமான அதிமுக தொண்டர்கள் இன்று ஜெயலலிதா சமாதிக்கு செல்வார்கள். எனவே அதற்கேற்ப போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்