[X] Close

தகுதி இழப்பு செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின்

m-k-stalin-speech-about-it-raid

ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தவர்களை தகுதி இழப்பு செய்ய வேண்டும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


Advertisement

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் இல்லம் மற்றும் புதுக்கோட்டையில் அவருக்கு சொந்தமான குவாரி, கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் நேற்று வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் இன்று வெளியானது. அதில் ஆர்.கே.நகரில் உள்ள மொத்த வாக்காளர்களில் 85 சதவிகிதம் பேருக்கு பணப்பட்டுவாடா செய்ய அதிமுக அம்மா அணி திட்டமிட்டிருந்ததும், அதற்காக ரூ.89.65 கோடி வழங்க இருந்ததும் தெரியவந்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், பணப்பட்டுவாடா செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தகுதியிழப்பு செய்ய வேண்டும் என கூறியுள்ளார். நேர்மையான தேர்தல் என்ற ஜனநாயகத்தின் ஆணிவேர் பிடுங்கி எறியப்பட்டுள்ளது எனக் கூறிய ஸ்டாலின், அரசியல் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை என்ற கோட்பாடு குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டினார். பணப்பட்டுவாடா புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close