[X] Close

சேற்றில் மூழ்கடித்து இளைஞர் கொலை

The-Man-has-killed-in-the-pond-in-Tiruvallur

திருவள்ளூர் அருகே கோயில் குளத்தில் உள்ள சேற்றில் மூழ்கடித்து இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement

திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூர் விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். தனியார் நிறுவனம் ஒன்றுல் வேலை பார்த்து வந்த இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவியும், 9-ஆம் வகுப்பு பயிலும் காயத்திரி என்ற மகளும், 4-ஆம் வகுப்பு பயிலும் பிரவீன் என்ற மகனும் உள்ளனர். நேற்று இரவு நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற இவர் பின்னர் வீடு திரும்பவில்லை. 

Image result for murder


Advertisement

இந்நிலையில் வீட்டருகே உள்ள முக்குளத்தீஸ்வரர் கோயில் குளத்தில் உள்ள சேற்றில் முகம் அழுகிய நிலையில் உடல் கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்று பார்த்த போது அது ராமச்சந்திரன் என்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த திருவள்ளூர் போலீசார், சடலத்தை  கைப்பற்றி திருவள்ளூர் அரசு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Image result for murdered

மேலும் இச்சம்பவம் குறித்த புகாரின் அடிப்படையில் திருவள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமச்சந்திரன் கொண்டு வந்த வாகனம் மற்றும் செருப்பு குளத்தின் கரை மீது இருக்கும் நிலையில் அவருடன் வந்தவர்கள் இவரை சேற்றில் மூழ்கடித்து அழுத்திக் கொலை செய்துதிருக்கலாம் என்ற கோணத்தில் முதல் கட்ட விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர். மேலும் முன் விரோதம் காரணமா கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலைச் சம்பவம் மேல்நல்லாத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பையும்,அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close