பொருளாதார குற்றங்களை புரிந்துவிட்டு தப்பிச்செல்லும் குற்றவாளிகள் மீதான நடவடிக்கைக்காக ஜி20 மாநாட்டில் 9 அம்சங்களை இந்தியா முன்வைத்துள்ளது.
ஜி 20 மாநாட்டில் சர்வதேச வர்த்தகம், சர்வதேச நிதி மற்றும் வரி அமைப்பு குறித்த கூட்டம் நடந்தது. அப்போது, பொருளாதார குற்றங்களை புரிந்துவிட்டு வேறு நாடுகளுக்கு தப்பிச்செல்லும் குற்றவாளிகள் மீதான நடவடிக்கை குறித்த 9 அம்சங்களை பிரதமர் நரேந்திர மோடி தாக்கல் செய்தார்.
இதன்படி, பொருளாதார குற்றம் புரிந்தவர்களை விரைவில் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்புதல், சொந்த நாடுகளில் அவர்கள் மீதான குற்றங்களின் விசாரணையை விரைவு படுத்துதல் தொடர்பான சட்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கோரப்பட்டது. பொருளாதார குற்றவாளிகளுக்கு தஞ்சம் அளிக்காமல் இருக்க ஜி20 நாடுகள் ஒருங்கிணைந்த நடவடிக்கையை உருவாக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
பொருளாதார குற்றவாளிகள் குறித்த தகவல்கள் பரிமாற்றத்திற்கு சர்வதேச ஒத்துழைப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது. பொருளாதார குற்றவாளிகள் வெளிநாடுகளில் வைத்துள்ள சொத்துகளை அடையாளம் கண்டறிவது, பறிமுதல் செய்வது போன்றவற்றுக்கான அடித்தளம் அமைக்க, ஜி20 நாடுகள் பரிசீலிக்க வேண்டும் என்றும் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.
Loading More post
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: தமிழகம் வருகிறார் வெங்கையா நாயுடு
‘கொல்கத்தா புறப்படுகிறேன்’- கொண்டாட்டத்தில் விராட் கோலி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 4-ம் ஆண்டு நினைவுநாள்; பாதுகாப்புக்காக போலீசார் குவிப்பு
பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் ராணுவ ரகசியங்களை வழங்கிய ராணுவ வீரர் கைது
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!