Published : 08,Apr 2017 08:10 AM

பிரசாரத்துக்கு வருகிறார் விஜயகாந்த்

Vijayakantha-election-campaign-in-RK-Nagar-Tomorrow

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து அதன் தலைவர் விஜயகாந்த் நாளை பிரசாரம் மேற்கொள்கிறார்.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இங்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன் வருடாந்திர மருத்து பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இதன் பின் மருத்துவர்கள் நலமுடன் இருப்பதாகக் கூறியதையடுத்து வீடு திரும்பினார். எனவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் மதிவாணனை ஆதரித்து விஜயகாந்த் பிரசாரம் செய்வாரா? என சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் விஜயகாந்த் நாளை பிரசாரம் மேற்கொள்வார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்