‘தளபதி63’ படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
‘சர்கார்’ படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கவுள்ள திரைப்படம் ‘தளபதி63’. வழக்கம் போல் இந்தப் படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இந்தப் படத்தினை அட்லி இயக்குகிறார். இவர் ஏற்கெனவே ‘தெறி’, ‘மெர்சல்’ உள்ளிட்ட இரண்டு படங்களை விஜய்யை வைத்து இயக்கி உள்ளார். வசூல் ரீதியாக பெரிய வெற்றிய ஈட்டியப்படங்களாக இந்த இரு படங்களும் அமைந்தன.
இதனை அடுத்து ‘தளபதி63’படத்தில் அட்லி ஒப்பந்தமாகியுள்ளார். இதனை ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா ஒப்பந்தமாகி இருக்கிறார். இதன் மூலம் பெரிய இடைவெளிக்குப் பிறகு நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக இணைகிறார். 2009ல் வெளியான ‘வில்லு’ படத்தில் ஜோடியாக நடித்திருந்தார். மேலும் படத்தில் வேறு யார் யாரெல்லாம் நடிக்க உள்ளனர் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
இந்நிலையில் புரடெக்ஷன் டிசைனர் முத்துராஜ், அவரது ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘விஜயின்‘தளபதி63’ படத்தின் செட் வேலைகள் தொடங்கிவிட்டதாக’ தெரிவித்துள்ளார். மேலும் அதற்கான புகைப்படம் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டில் தொடங்க உள்ள ஷங்கரின் ‘இந்தியன்2’, விஜயின் ‘தளபதி63’ ஆகிய இரண்டு மிகப் பெரிய படங்களுக்கும் இவரே புரடெக்ஷன் டிசைனராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜயின் ‘தளபதி63’ படத்திற்கான செட் வேலைகள் சென்னை பெரம்பூரிலுள்ள பின்னி மில்லில் அமைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி