Published : 08,Apr 2017 08:04 AM
ஜியோ சலுகை: செல் நிறுவன வருவாய் 10% சரிவு

செல்ஃபோன் நிறுவனங்களின் வருவாய் கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் சுமார் 10 சதவிகிதம் குறைந்துள்ளது.
குரல் வழி சேவை, டேட்டா ஆகிய பிரிவுகளில் செல்ஃபோன் நிறுவனங்களின் வருமானம் 37 ஆயிரத்து 284 கோடி ரூபாயாக குறைந்துள்ளதாகத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆறு மாதமாக ஜியோ நிறுவனம் டேட்டா, இலவச அழைப்பு வசதி உள்ளிட்ட பல சேவைகளை இலவசமாக அறிமுகம் செய்தது. கடந்த மார்ச் 31 ஆம் தேதியுடன் இதன் இலவச சேவை முடிவடைந்தது. இதையடுத்து, பிரைம் வாடிக்கையாளராக சேர்ந்தவர்களுக்கு, காம்ப்ளிமென்டரி அடிப்படையில் மேலும் 3 மாதம் இலவச சேவையை நீட்டித்தது. இந்தச் சலுகையை ரத்து செய்ய வேண்டும் என்று டிராய் கேட்டுக்கொண்டுள்ளது. எனவே ஜியோ, சம்மர் சர்ப்ரைஸ் இலவச சலுகை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. ஜியோ நிறுவனத்தின் இலவச சேவையே, செல்ஃபோன் நிறுவனங்களின் வருமானக் குறைவுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.