ஜி20 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று அர்ஜெண்டினா பயணம் மேற்கொள்கிறார். இப்பயணத்தின்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.
ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு நவம்பர் 28-ஆம் தேதி அர்ஜெண்டினாவில் தொடங்குகிறது. ஆண்டு தோறும் நடைபெறும் இந்த மாநாட்டில் உலக அளவில் பொருளாதாரத்தில் முன்னேற்றத்துடன் காணப்படும் 20 நாட்டு தலைவர்கள் பங்கேற்பார்கள். இம்மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அர்ஜெண்டினா செல்கிறார்.
ஜி20 மாநாட்டையொட்டி அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப், பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே ஆகியோர் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் எனத் தெரிகிறது. ஆனால் என்ன விவகாரம் குறித்து பேசப் போகிறார்கள் என்ற தகவல்கள் இதுவரை தெரியவில்லை.
இதுதவிரவும் டொனால்ட் டிரம்ப், அர்ஜெண்டினா, சீனா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். ஜி20 மாநாட்டில் வர்த்தகம், சூழலியல் மாற்றம், சுகாதாரம் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து முக்கிய விவாதங்கள் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
Loading More post
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix