ரோடு கான்ட்ராக்டர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை அரசு கொண்டுவந்துள்ளது.
பொதுவாக அரசு நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் சாலை பணிகளை யாரிடம் கொடுப்பது என்பதற்காக டெண்டர் விடப்படும். டெண்டரில் வெற்றி பெறும் நபர்கள் அல்லது நிறுவனங்களே அதற்கான குறிப்பிட்ட சாலை திட்ட பணிகளை மேற்கொள்வார்கள். இந்நிலையில் ரோடு கான்ட்ராக்டர்களுக்கு கடுமையாக விதிமுறைகளை அரசு கொண்டுவந்துள்ளது. அதன்படி, 300 கோடிக்கு மேலான சாலை ஒப்பந்தம் பணிகளை எடுத்து அதனை குறிப்பிட்ட கால கெடுவுக்குள் முடித்து கொடுக்காதவர்கள் மீண்டும் சாலை ஒப்பந்தத்தில் பங்கேற்க முடியாது. பழைய பணிகளை முடித்துக் கொடுத்த பின்புதான் அவர்கள் புதிய டெண்டரில் பங்கேற்க முடியும். அரசு நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் தேசிய நெடுஞ்சாலை பணிக்குத்தான் இது பொருந்தும். இதற்காக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் விதிகளில் மாற்றத்தையும் கொண்டு வந்துள்ளது.
இதன்மூலம் நல்ல ஒப்பந்ததாரர்கள் யார்..? யார் சரியில்லை என்பதை தெரிந்துகொள்ள அரசு முயற்சிக்கிறது. நவம்பர் 20-ஆம் தேதி முதல் இந்த கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ள நிலையில் இனிமேல் மேற்கொள்ளப்படும் சாலை ஒப்பந்த பணிகளுக்கு தான் இந்த விதி பொருந்தும். பொதுவாக ஒப்பந்தம் எடுப்பவர்கள் அதனை குறிப்பிட்ட கால நேரத்திற்குள் முடித்து கொடுக்காமல் இழுத்தடிப்பதாக கூறப்படுகிறது. இதனால் திட்டமிட்டப்படி சாலையை திறக்க முடியாத சூழ்நிலை அரசுக்கு ஏற்படுவதாகவும் தெரிகிறது. இந்நிலையில் அரசு ரோடு கான்ட்ராக்டர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது.
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்