அறிவிப்பின்றி வெளியிடப்பட்டாலும் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் இன்றும் யூ டியூப்பில் சாதனை படைத்துக்கொண்டு இருக்கிறது.
அஜித் ரசிகர்களால் தினமும் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது விஸ்வாசம். படப்பிடிப்பு தொடங்கியது முதல் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ரசிகர்கள் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். விஸ்வாசம் படத்தின் மூலம் அஜித்துடன் 4வது முறையாக இயக்குநர் சிவா கூட்டணி சேர்ந்துள்ளார். எனவே அதிகமான எதிர்பார்ப்பு இப்படத்திற்கு உருவாகியது.
இந்தப் படம் பொங்கல் அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ படமும் பொங்கல் அன்று வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதனால் வரும் பொங்கல் அஜித்-ரஜினி மோதும் பொங்கலாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என அஜித் ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த ஞாயிறன்று வெளியிட்டப்பட்டது. எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென்று மோஷன் போஸ்டர் விடப்பட்டாலும் வழக்கம்போல் அஜித் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். போஸ்டர் வெளியாகி சிறிது நேரத்தில் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது.
இந்நிலையில் இன்று வரை யூடியூப் சமூக வலைதளத்தில் இந்த போஸ்டர் வீடியோ ட்ரெண்டிங்கில் உள்ளது. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த போஸ்டர் அஜீத் ரசிகர்களால் அதிக அளவில் பார்க்கப்பட்டு வருகிறது. இது வரை விஸ்வாசம் மோஷன் போஸ்டரை 50 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்தும், 4 லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்தும் உள்ளனர். இதற்கு முன் வெளியான பல படங்களில் மோஷன் போஸ்டர்கள் விஸ்வாசம் படத்தைவிட குறைவான பார்வையாளர்களையும், லைக்குகளை மட்டுமே பெற்றுள்ளன. இதனால் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் யூடியூபில் சாதனை படைத்து வருகிறது.
பொங்கல் போட்டியாக பார்க்கப்படும் பேட்ட திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை இதுவரை 45 லட்சத்துக்கும் குறைவானவர்களே பார்த்துள்ளனர். வழக்கம் போல் சமூக வலைதளங்களில் அஜித் கொண்டாடப்படுபவர் என்பதால் பேட்ட திரைப்படத்தை அடித்து முன்னேறிக்கொண்டு இருக்கிறது விஸ்வாசம். ஆனால் பொங்கலன்று தான் உண்மையான போட்டி இருப்பதாகவும், திரையரங்கு போட்டியில் தலைவரா? தலயா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றும் சினிமா ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?