காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடகா தாக்கல் செய்த வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே ரூபாய் 5000 கோடி திட்ட மதிப்பீட்டில் மேகதாது அணை கட்ட கர்நாடகா அரசு முயற்சித்து வருகிறது. இதற்கான வரைவு அறிக்கையை கர்நாடகா அரசு தாக்கல் செய்திருந்தது. அணை அமையும் இடம், அணையின் பரப்பளவு உள்ளிட்ட அம்சங்கள் வரைவு அறிக்கையில் இடம்பெற்றிருந்தன. குடிநீர் மற்றும் மின் உற்பத்திக்கு அணை கட்ட இருப்பதாக கர்நாடகா சொல்லி வருகிறது. ஆனால் மேகதாது அணை கட்ட தமிழக அரசு தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் கர்நாடாக அரசு தாக்கல் செய்த வரைவு அறிக்கைக்கு மத்திய அரசின் சுற்றுச் சூழல் துறை ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து வரைவு அறிக்கையின் அடிப்படையில் காவிரியாற்றில் கர்நாடகா மேகதாது அணை கட்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழக அரசு தொடர்ச்சியாக இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கர்நாடகாவின் வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!