திமுக கூட்டணியில் மதிமுக உள்ளதா என்பதை மு.க.ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். தங்கள் கூட்டணியில் மதிமுகவும் விடுதலைச் சிறுத்தைகளும் இல்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியது பற்றிய கேள்விக்கு வைகோ இதனை தெரிவித்தார்.
இதனிடையே, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள 7 பேரையும் விடுவிக்க வலியுறுத்தி ஆளுநர் மாளிகை முற்றுகையிடும் மதிமுகவின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ஏழு பேரையும் விடுதலை செய்யாமல் மனித நேயமின்றி காலம் தாழ்த்தி வரும் தமிழக ஆளுநரின் போக்கிற்கு கண்டனம் தெரிவித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை வரவேற்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 3ஆம் தேதி மதிமுக நடத்தவிருக்கும் போராட்டத்திற்கு திமுக ஆதரவு அளிக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இதனிடையே, தோழமைகளாக இயங்கிவரும் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள், மதிமுக ஆகியவை கூட்டணியாக மாற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளன் கூறியுள்ளார்.
Loading More post
பாலியல் துன்புறுத்தல் வழக்கு: நடிகர் விஜய் பாபு கைது! ஆனால் ஜாமீனில் விடுவிப்பு!
ஓபிஎஸ்ஸின் மறைமுக பாஜக சாயம் வெளுத்துவிட்டது - கார்த்தி சிதம்பரம்
நிச்சயம் அனைவருக்கும் விடுதலை கிடைக்கும் - அற்புதம்மாள் பேட்டி
இப்படியும் சிலர்.. மரிக்காத மனிதநேயமும், மனிதமும்.. நெகிழ்ச்சியான ட்வீட்டின் பின்னணி இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai
நீதிமன்றத்தின் கதவை தட்டும் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏகள்! லேட்டஸ்ட் டாப் 10 தகவல்கள்
’பஞ்சாங்கம்’ என்ற வார்த்தையை விட்டுவிடுங்க; நான் சொன்ன உண்மைய பாருங்க - மாதவன் விளக்கம்
திரையில் வீராங்கனைகளாக ஒளிரப்போகும் பாலிவுட் பிரபலங்கள் யார் யார்?
எல்ஐசி ஐபிஓ: ரூ.1.8 லட்சம் கோடி இழப்பு! இன்னும் சரியும்! முதலீட்டாளர்கள் வருத்தம்!