ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டி20 போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ஆரோன் ஃபிஞ்ச் மற்றும் ஆர்சி ஷார்ட் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 28 (23) ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய கேப்டன் ஃபிஞ்ச் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து ஆர்சி ஷார்ட்டும் 33 (29) ரன்களில் அவுட் ஆனார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 164 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் யாரும் எதிர்பாராத விதமாக குருனல் பாண்டியா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இதைத்தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் மற்றும் தவான் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 23 (16) ரன்கள் எடுத்த நிலையில் ரோகித் விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து வந்த கேப்டன் கோலி ரன்களை குவிக்க தொடங்கினார். மற்றொரு புறம் தவான் அதிரடி காட்டினார். 41 (22) ரன்களில் தவான் அவுட் ஆனார்.
ஆனால் நிலைத்து விளையாடிய கோலி அரை சதம் அடித்தார். 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்து இந்தியா வெற்றி பெற்றது. இறுதிவரை விளையாடிய கோலி அவுட் ஆகாமல் 41 பந்துகளில் 61 ரன்களை சேர்த்தார். இதனால் 1-1 என்ற கணக்கில் ஆட்டம் சமனில் முடிந்தது.
Loading More post
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
‘எங்க கட்சிக்காரங்களே இப்படி செய்வாங்கனு கொஞ்சமும் நினைக்கல’- வேதனையில் ஆதித்ய தாக்கரே
Online Games: ‘ அவசர சட்டம் வரலாம்’- நீதிபதி சந்துரு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
அமெரிக்காவில் 46 அகதிகளின் சடலங்களுடன் நின்ற கண்டெய்னர் லாரி!
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai