கஜா புயல் பாதிப்பு குறித்து தஞ்சை மாவட்டத்தில் ஆய்வு செய்த மத்தியக் குழுவினரிடம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர். இன்று காலை பருத்திக்கோட்டை பகுதியில் சாலை ஓரங்களில் இருந்த மரங்களின் சேதம் குறித்தும், விவசாய நிலங்களில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்தும் மத்தியக்குழு ஆய்வு செய்தது.
பின்னர் ஒரத்தநாடு ஒன்றியத்திற்கு உட்பட்ட புதூர் கிராமத்தில் சேதமடைந்த வீடுகளை மத்தியக்குழு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து புலவன்காடு கிராமத்தில் உள்ள தென்னை மர தோப்பினை மத்தியக்குழுவினர் ஆய்வு செய்த போது, அப்பகுதி தென்னை விவசாயிகள் அதிகாரிகளின் காலில் விழுந்து கதறி அழுதனர்.
தென்னை மரங்களின் சேதம் குறித்து அதிகாரிகளிடமும், அப்பகுதி மக்களிடமும் ஆய்வுக்குழுவினர் கேட்டறிந்தனர். மேலும் புயல் பாதித்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் மத்திய ஆய்வுக்குழு அதிகாரிகள் பார்வையிட்டனர். தொடர்ந்து புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட திப்பியகுடி துணை மின் நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் பட்டுக்கோட்டை தாலுகா புதுக்கோட்டை உள்ளூர் என்ற கிராமத்தில் புயல் பாதித்த இடங்களை மத்தியக்குழு ஆய்வு செய்தது. அப்போது தங்களின் வாழ்வாதாரத்தை மீட்டுத்தரக்கோரி விவசாயிகள் கண்ணீர் மல்க மத்தியக்குழு அதிகாரிகளிடம் மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து மல்லிப்பட்டிணத்தில் படகு சேதம் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
Loading More post
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி சில மணி நேரத்திலேயே வெட்டிப்படுகொலை
டீ விலை ₹20; சர்வீஸ் சார்ஜ் ₹50; நல்லா இருக்கு இந்த பார்ட்னர்ஷிப்: IRCTC-ஐ சாடிய மக்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: யார் கேப்டன்?
பக்ரைனில் இறந்த தொழிலாளி...நல்லடக்கம் செய்ய கைகோர்த்த ரஜினி ரசிகர் மன்றத்தினர்
மீண்டும் மிரட்டும் கொரோனா - பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்