மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி நான்காவது முறையாக கோப்பையை வென்றது.
மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, வெஸ்ட் இண்டீசில் நடந்து வந்தது. இதில் லீக் போட்டிகள் முடிந்து, இந்திய நேரப்படி இன்று அதிகாலை இறுதிப்போட்டி நடந்தது. இதில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி, 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் எடுத்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேனியல் வியாட் 37 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஹெதர் நைட் 25 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் யாரும் இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை. சொற்ப ரன்களில் அவர்கள் ஆட்டமிழந்தனர்.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் கார்ட்னர் 3 விக்கெட்டும் மேஹன் ஷுட், வேர்ஹம் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 15.1 ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 106 ரன்கள் சேர்த்து அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் கார்டர்னர் 33 ரன்களும் லான்னிங் 28 ரன்களும் எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் நான்காவது முறையாக ஆஸ்திரேலிய அணி மகளிர் டி 20 உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ளது. இறுதி போட்டி யில் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவை வென்றதில்லை என்ற சென்டிமென்ட் இந்த போட்டியில் தொடர்ந்துள்ளது.
Loading More post
2024 தேர்தல் கூட்டணி? - அகிலேஷ் யாதவை சந்தித்தார் சந்திரசேகர ராவ்
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!